முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! எனக்கு பாதிப்பா? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்!
கொரோனா தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை அதன் தாக்கம் குறைந்த பாடில்லை.மூன்று மாத காலம் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த மூன்று மாத காலம் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடுகிறது. அந்த நிலையில் சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பெரும்பாலோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகிறது.
அந்த வரிசையில் தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் தற்போது தனிமைபடுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.எடப்பாடி பழனிச்சாமியும் தன்னுடன் நெருக்கமாக இருந்த நிர்வாகிகளை கொரோனா தொற்று சோதனை செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.அதனையடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திய லிங்கமிற்கு கொரோனா தொற்று பாதிப்பு என்று செய்தி வெளிவந்தது.
இந்த செய்தி வழிவந்த சில மணி நேரத்திலேயே,முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இதுகுறித்து பேசியுள்ளார்.தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென்றும்,யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.