ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இரு மடங்கு அபராதம்! வருமான வரித்துறை எச்சரிக்கை!!
கடந்த பல மாதங்களாக ஆதார் மட்டும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றுக்குள் இணைக்காதவர்களுக்கு இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. டெல்லியில் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண்ணை ஆகியவற்றை கட்டாய இணைக்க வேண்டும். பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பின் அவசரமாக நீடிக்கப்பட்டது. அதேசமயம் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முதலில் www.incometaxindaiaefiling என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அந்த இணைய தளத்தில் link Adheer என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இணையதள பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் ஆதார் உள்ளபடி பதிவு செய்ய வேண்டும். ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தை டிக் செய்ய வேண்டும்.
அனைத்து விவரங்களும் சேகரித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்சில் டிக் செய்ய வேண்டும். இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும்.
ஆதார் எண்ணை பார்ன் அட்டையுடன் இணைக்கவில்லை என்று எவ்வாறு பரிசோதிப்பது: www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaa என்ற இணையதளத்தில் மூலம் செல்ல வேண்டும் . அதில் பான் எண், பிறந்த தேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும். இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால் இணைப்பு குறித்த முழு விவரங்களும் கிடைக்கும்.