சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!
பினாமி பெயரில் சசிகலா வாங்கியது 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறை முடக்கியது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவிற்கு ஜெயலலிதா மறைவிற்குப் அடுத்தது பல சோதனைகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கட்சியும், ஆட்சியும் கையை விட்டு சென்றது. இதனையடுத்து மத்திய அரசு தங்களது சோதனை நடவடிக்கை தீவிரமாக காட்டியது. பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் உறவினர் தொடர்பான 127 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். இந்த வகையில் முதல் கட்டமாக சென்னை, கோவை, புதுவையில் இருந்து 9 சொத்துக்களையும், 2-வது கட்டமான போயஸ் தோட்டம், தாம்பரம், ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய இடங்களில் இருந்த சொத்துக்களையும், 3-வது கட்டமாக கோடநாடு எஸ்டேட் தொடர்பான சொத்துக்களையும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் கணக்கில் வராத பல கோடி ரூபாயை வைத்திருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் 4430 கோடி ரூபாய் வருமான வரி இணைப்பு செய்ததாக வருமானவரித்துறை தெரிவித்திருந்தது. கணக்கில் வராமல் 4500 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஐந்தாண்டுகளாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு 1500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் இதற்கு அடிப்படையாக 30 கோடி ரூபாய் மாதிரியான 65 சொத்துக்களையும் வருமானவரித்துறை முடக்கியது. கடைசியாக 2000 கோடி மதிப்பிலான சிறுதாவூர் பங்களாவையும் முடக்கப்பட்டது. சுமார் 4000 கோடி அளவிலான சொத்துக்களையும் வருமான வரித்துறை முடக்கி வந்தனர். இந்த நிலையில் சென்னை தி. நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவன சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் சசிகலா பினாமி என்று பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பதாக உறுதி செய்ததை அடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.