இந்த மாவட்டங்களிலெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
தொடர்ந்து கடந்த சில தினகளாக ஆங்கங்கே மழை பெய்து வந்த நிலையில். தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டு காரணமாக இடிமின்னல்லுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளனர். 04.07.22 அன்று தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இன்று பொரறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளனர். அதிகபட்ச வெப்பநிலை 35 – 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 -36 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 05-07-22 மற்றும் 06-07-22 நாட்களில் தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ,தேனி போன்ற மாவட்டம் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வானிலை மாற்றம் காரணமாக 02-07-22 முதல் 04-07-22 மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதியையொட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் அதனால் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு வடக்க ஆந்திரா கடலோரப் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.