“வருகிறான் சோழன்”…  பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் வீடியோ துணுக்கு!

0
216

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.

இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .

இதையடுத்து முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட் வரும் என்று காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே  வெளியான கதாபாத்திர போஸ்டர்களை அடுத்து தற்போது புதிய வீடியோ கிளிம்ப்ஸ் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வருகிறான் சோழன்’ என்ற கேப்ஷனோடு வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

http://https://www.instagram.com/reel/CfgBgklDcSn/?igshid=MDJmNzVkMjY%3D

 

 

Previous article இந்த மாவட்டங்களிலெல்லாம்  இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை   ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! 
Next articleதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை உயரும்! இன்றைய தங்கத்தின் விலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here