விஜய்யின் அடுத்த படத்தில் லோகேஷோடு இணையும் சந்தானம் பட இயக்குனர்!

0
144

 

இயக்குனர் லோகேஷ் விக்ரம் வெற்றிக்குப் பிறகு விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தமிழ் திரை உலகில் தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது திரைப்படம் விக்ரம் சமீபத்தில் வெளியாகி இதுவரை தமிழ் படங்கள் செய்யாத அளவுக்கு வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. விக்ரம் படத்துக்கு அடுத்து தளபதி  67 படத்தில் விஜய்யை இயக்க உள்ளார் லோகேஷ். இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேயாத மான், ஆடை மற்றும் குலுகுலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் ‘தளபதி 67’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற உள்ளாராம். இவர் ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களிலும் லோகேஷோடு இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை உயரும்! இன்றைய தங்கத்தின் விலை!
Next articleஎதுக்கு இந்த டிரெஸ்? மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டும் மாளவிகா மோகனன்