விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன?

0
164

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன?

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.

இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.மேலும் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்து அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது  இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தைத் தொடங்குவதில் உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டிவரும் நிலையில் படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி மீதிப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

Previous articleஐயா என் பேனாவை காணோம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த அரசியல் பிரபலம்!
Next articleவசமாக மாட்டிய பைக் திருடன்! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா?