திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய கார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகைy தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது.
தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கும், மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தில் உள்ள சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து ஒரு மடக்கில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சாமி கருவறை பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து பின்னர் அம்மன் சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது.
பரணி தீபத்திருவிழாவில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் , மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி உள்ளிட்ட பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பரணி தீபத்தை கண்டு வழிப்பட்டனர்.
இன்று மாலை ஆலயத்தில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள அப்ழுபோது ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே ஒரு நிமிடம் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி தர மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும் .