“வஞ்சத்துக்கு ஒரு அழகான முகம்…” பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்… வைரல் போஸ்டர்

0
298

“வஞ்சத்துக்கு ஒரு அழகான முகம்…” பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்… வைரல் போஸ்டர்

மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.

இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .

இதையடுத்து முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட் வரும் என்று காத்திருக்கின்றனர். சமீபத்தில் வீடியோ கிளிம்ப்ஸ் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வருகிறான் சோழன்’ என்ற கேப்ஷனோடு வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

முன்னதாக கதையின் நாயகன் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் போஸ்டர் மற்றும், கார்த்தி நடிக்கும் வந்தியத் தேவன் லுக் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது நாவலின் மையக் கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திர லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

http://https://www.instagram.com/p/CfqSrt7PlDi/?utm_source=ig_web_copy_link

 

 

Previous articleதமிழகத்தில் இந்த பகுதிகளில்  காலரா நோய் தொடர்ந்து அதிகரிப்பு! பீதியில் மக்கள்!
Next articleகும்பாபிஷேகம் விழாவில் பிற மதம் பங்கேற்கக் கூடாத? மத்திய அமைச்சர் வெளியட்ட அறிவிப்பு !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here