அஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்!

0
333

அஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்!

நடிகர் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் H வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. மிகப்பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்தாலும், விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக இதே கூட்டணி ‘அஜித் 61’ படத்துக்காக இணைந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், பூனே மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐரோப்பா சுற்றுலாவில் இருக்கும் அஜித் இந்தியா திரும்பியதும் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மறைந்த மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleமக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறாரா விஜய்? பின்னணி என்ன?
Next articleமகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here