பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

0
171
CCTV camera in the school classroom! Parents enthusiastic welcome!
CCTV camera in the school classroom! Parents enthusiastic welcome!

பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா என்ற கவலை அனைத்து பெற்றோர்களிடமும்யிருந்து வருகிறது. இந்நிலையை மாற்றுவதற்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு  பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் புதிய பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது.

மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படுத்தத் தன்மை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த வகுப்பறையில் சிசிடி பொருத்தும் திட்டம். அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தனிப்பட்ட இணையதள முகவரி மற்றும் கடவுச்சொல் உடன் கூடிய உள்நுழைவுச் சான்று வழங்கப்படும்.

மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்ரிடம்  ஒப்புதல் பெற்ற பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களின் சுய  விவரத்தை பொதுப்பணித்துறைக்கும் அனுப்ப வேண்டும். இந்த செயல் முறையை அனைத்து அரசு பள்ளிகளும்  செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வகுப்பறையில்  சிசிடி பொருத்துவதன் மூலம் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலமாகவும் அல்லது கணினி மூலமாகவும் மாணவர்களின் கற்ப்பித்தல் முறையை  பார்த்துக் கொள்ளலாம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஅதிமுக பொதுக்குழுவில் குழப்பங்களை தவிர்க்க புதிய யுக்தியுடன் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு!
Next articleஇசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி… குவியும் வாழ்த்துகள்