மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

0
221

மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ என்ற படத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே இன்று காலை பார்த்தோம்.

இந்த நிலையில் மீனா போலவே ரஜினியுடன் 24 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்புவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் ரஜினி மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் முக்கிய வேடமொன்றில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாகவும் காமெடி வேடத்தில் சூரி நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleகோலிக்கு “shutup”சொன்ன வில்லியம்ஸ்
Next articleவேலூரில் பரபரப்பு ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here