38 வீரர்களுடன் திடீரென மாயமான போர் விமானம்: பெரும் பரபரப்பு

0
144

சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று 38 வீரர்களுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமானதாக சற்றுமுன்னர் வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை அண்டார்டிகாவை நோக்கி விமானப் படை போர்விமானம் ஒன்று பறந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 38 இராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த விமானம் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை துண்டித்தது. இதனையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

சி-130 ஹேர்கல்ஸ் என்ற வகையைச் சேர்ந்த இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு சில நேரத்தில் இந்த விமானம் குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து சிலி நாட்டின் அதிபர் செபஸ்டின் பினேரா கூறும்போது ’ராணுவ விமானம் வீரர்களுடன் மாயமான செய்தி தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாகவும் இருப்பினும் விமானத்தை கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

சிலி நாட்டு விமானம் கடத்தப்பட்டு இருக்குமா? அல்லது விபத்துக்குள்ளாகி இருக்குமா? என்ற பயத்தால் அந்நாட்டு மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஉலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை
Next articleலோக்சபாவில் திமுக நடத்திய நாடகம்! கூட்டணி கட்சிகளே கழுவி ஊற்றும் கேவலம்