கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தொழிலதிபர் மகனிடம் காவல்துறையினர் கிடக்குப்பிடி விசாரணை!

0
91

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்கின்ற கொடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்ட பங்களா இருக்கிறது.

அங்கே கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி இரவு பணியிலிருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் அந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது.

இது தொடர்பான வழக்கில் அதிமுக ஆட்சியில் எந்த விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை. தற்போது திமுக ஆட்சி அமைந்த பின்னர் விசாரணை சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான காவல்துறையினர் மணல் சப்ளையர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமாரிடம் நேற்று கோயம்புத்தூரில் விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வாரிகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை ஆறுமுகசாமி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில் ஆறுமுகசாமியின் சொத்துக்கள் பல மடங்கு பெருகியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவருடைய மகன் பெயரில் பல்வேறு நிறுவனங்களை ஆரம்பித்தார்.

அதன் பிறகு அறக்கட்டளை ஆரம்பித்து கல்வி, மருத்துவ உதவி, உள்ளிட்டவற்றை வழங்கினார். மணல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதன் காரணமாக, உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில். யாரும் எதிர்பாராத விதத்தில் காவல்துறையினர் கொடநாடு கொலை, கொள்ளை, வழக்கின் விசாரணை வளையத்திற்குள் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரை கொண்டு வந்தது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அதாவது கொடநாட்டில் ஆறுமுகசாமி தரப்புக்கு சொந்தமான ஒரு டீ எஸ்டேட் இருப்பதாகவும் இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா. கொடநாடு பங்களா, குறித்த பல்வேறு ஆவணங்கள், ஆதாரங்கள், உள்ளிட்டவை இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், உள்ளிட்டவை தொடர்பாகவும், ஆறுமுகசாமியிடம் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஒப்பந்தம் அரசியல் தொடர்பில் உள்ளார்களா? கொடநாடு கொலை, கொள்ளை. சம்பவத்திற்கு பின்னர் இவர் சந்தித்த அரசியல் தலைவர்கள் யார் என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பி தகவல்களை சேகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படி கொட நாடு, கொலை, கொள்ளை, வழக்கு விசாரணை விரிவடைந்து வருவதால் மிக விரைவில் அந்த சம்பவத்திற்கு காரணம் யார்? அதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது தொடர்பான தகவல் வெளியாகும் என்று அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.