ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம்… டைட்டில் இதுதான்? கசிந்த தகவல்!

0
238

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம்… டைட்டில் இதுதான்? கசிந்த தகவல்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0

எந்திரன் 2 ஆம் பாகத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஹிட் படமான இந்தியன் படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கினார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனோடு, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்து அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஷங்கர் இப்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவை கதாநாயகனாக வைத்து ‘RC 15’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளதாக சொலல்ப்படுகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் கதை என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மற்றும் இயக்குனரின் கதையை படமாக்குவது இதுவே முதன்முறையாகும்.

இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து படத்துக்கு ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்வதாக சொல்லப்படுகிறது. முன்னதாக சிட்டிசன் என்ற தலைப்பும் படக்குழுவால் யோகிப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Previous articleஇன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை!
Next articleகொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தொழிலதிபர் மகனிடம் காவல்துறையினர் கிடக்குப்பிடி விசாரணை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here