முன்னாள் அமைச்சர் வீட்டில் திடீர் சோதனை! எடப்பாடி பழனிச்சாமி போட்ட ட்விட்டர் பதிவு!

அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு சொந்தமான 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இப்படியான நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார் .

இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, அதிமுக என்ற கட்சியை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர் கொள்ள முடியாத விடியா திமுக அரசு முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள், உள்ளிட்டோர் மீதும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என கூறியிருக்கிறார்.

அரசியல் பழிவாங்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

Leave a Comment