கேஸ் சிலிண்டர் விலை குறையுமா?

0
300

கடந்த சில மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலையும் நிர்ணயிக்கப்படுவதால் இந்த விலை ஏற்றம் மக்களுக்கு பாதகமாக இருந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது 14. 2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை டெல்லியில் 1053 ரூபாய் எனவும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1052 ரூபாய் 50 காசுகள் எனவும், கல்கத்தாவில் அதிகபட்சமாக 1079 ரூபாய் எனவும், அண்மையில் இந்த சிலிண்டர் விற்பனையாளர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டரின் விலை அதிகமாக கல்கத்தாவில் விற்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை 2து இடத்திலிருந்து வருகிறது. சென்னையில் சிலிண்டரின் விலை 1068 ரூபாய் 50 காசு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரே வருடத்தில் சிலிண்டர் விலை 219 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 834.50 என்ற விலையில் இருந்த சிலிண்டர் சென்ற வருடம் ஜூன் மாதம் விலையேற்றம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 25 மற்றும் அடுத்தடுத்த மாதங்களில் கணிசமாக அதன் விலை அதிகரிக்கப்பட்டது.

சென்ற வருடம் அக்டோபர் மாத நிலவரத்தினடிப்படையில் டெல்லியில் சராசரியாக சிலிண்டர் விலை 299.50 என்ற நிலையில் காணப்பட்டது. அதன் பின்னர் இந்த வருடம் மார்ச் மாதம் வரையில் விலை ஏற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

ஆனாலும் கடந்த மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைகளின் விலை பேரலுக்கு 100 டாலருக்கு மேல் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, சிலிண்டரின் விலை மறுபடியும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு மே மாதம் வரையிலேயே 2 முறை சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டது. மே மாதம் முடிவதற்குள்ளேயே வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் 1003 ரூபாய் என்றளவில் உயர்ந்தது.

எல்பிஜியின் விலை இறக்குமதி சமநிலை விலையினடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலே தெரிவித்திருப்பதைப் போல சர்வதேச அளவில் பல்வேறு கச்சா எண்ணெய் பொருட்களின் விலை நிர்ணயிப்பதில் இது முக்கியமான பங்கு வகிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

IPP விலையைப் பொறுத்தவரையில் பல்வேறு காரணங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றன. உதாரணமாக, FOP என்று சொல்லப்படும் சரக்கு கட்டணம் கடல் வழி மார்க்கத்தின் மூலமாக ஷிப்பிங் கட்டணம், காப்பீடு, சுங்கவரி, துறைமுக கட்டணம், உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் இருக்கின்றன.

அதோடு இந்தியாவைப் பொறுத்தவரையில் எல் ஜி பி கான விலை டாலரிலிருந்து ரூபாயாக மாற்றப்படும். இதன் காரணமாக தான் இந்திய ரூபாயின் மதிப்புக்கு எதிரான அமெரிக்க டாலர்களின் மதிப்பு சிலிண்டர்களை பொறுத்தவரையில் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக சரியும் பொழுது பல பொருள்களை பெரிதாக பாதிக்கப்படும் இதுவும் சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு மறைமுக காரணமாக இருக்கிறது.

செலவுகளுக்கான போக்குவரத்து கட்டணம் எண்ணெய் நிறுவனங்களின் லாபம், சந்தைப்படுத்தும், கட்டணம் டீலர் கமிஷன், வரிகள், உள்ளிட்ட அனைத்தையுமே சேர்த்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.

காச்சா எண்ணெய் விலை குறைவால் கேஸ் விலை குறையுமா?

இவ்வளவு கட்டணங்கள் இருக்கும்போது விலை குறையுமா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஆனால் கட்டா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே செல்லும்போது அடிப்படை விலை குறைவதால் கேஸ் சிலிண்டரின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரையில் இல்லாத அளவிற்கு 12 வாரங்களில் 2 சதவீதம் அளவுக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்று ஒரு நாள் பேசிய துக்க தினம் அனுசரிப்பு! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleவானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!