புனித யாத்திரை செல்லும் போது திடீர் மேக வெடிப்பு? பலி எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு!?..

0
137
a-sudden-cloudburst-while-going-on-a-pilgrimage-the-death-toll-continues-to-rise
a-sudden-cloudburst-while-going-on-a-pilgrimage-the-death-toll-continues-to-rise

புனித யாத்திரை செல்லும் போது திடீர் மேக வெடிப்பு? பலி எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு!?..

ஜம்மு மற்றும் காஸ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் பாதை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இவ்வெடி விபத்தில் பெருமழை கொட்டியது. மேகவெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.தொடர் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்குள் உள்ளது என இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி முழுவதும் எல்லை போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இன்று காலை மீண்டும் மீட்பு பணியை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.இதற்கு 6 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. காயமடைந்தவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளதுடன் உடனடியாக பணிக்கு ஈருபடுமாரு உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அனைத்து அதிகாரிகளும் அவர்களின் மொபைல் போன்களை ஆன் செய்து வைத்திருக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரின் புல்வாமா, குல்காம், சோபியான் மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட தெற்கு காஷ்மீரின் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் துணைநிலை மருத்துவ பணியாளர்களையும் மற்றும் மருந்துகள், அவசரகால உதவி பொருட்களையும் பகல்காமுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து காஷ்மீரின் ஸ்ரீநகர், பந்திபோரா, பாராமுல்லா மற்றும் புத்காம் உள்ளிட்ட வடக்கு மற்றும் மத்திய காஷ்மீரின் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு, கூடுதல் மருத்துவர்கள் மற்றும் துணைநிலை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துகள், அவசரகால உதவி பொருட்களை பல்தல் பகுதிக்கு அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.விபத்தில் சிக்கியவர்களை தொடந்து மீக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என கூறிவுள்ளர்கள்.

Previous articleவிஐடி யுனிவர்சிட்டியில் பணியாற்ற ஆசையா? அப்படியென்றால் உடனே விண்ணப்பங்கள்!
Next articleஇன்று ஒரு நாள் பேசிய துக்க தினம் அனுசரிப்பு! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!