வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

0
106

மெர்குரிசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓர் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வரையில் குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 11ஆம் தேதி வரையில் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல 12ஆம் தேதி வரையில் கர்நாடகா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.