கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு… கலந்துகொள்வாரா விக்ரம்?

0
63

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு… கலந்துகொள்வாரா விக்ரம்?

விக்ரம் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம்  7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். பல ஆண்டுகள் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11 ஆம் தேதி நடக்கும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விக்ரம் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அதை விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் மறுத்து விளக்கமளித்துள்ளார்.

விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்புவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு கோப்ரா ஆடியோ ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால், விக்ரம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

http://https://www.instagram.com/tv/CfwaA1ZlHud/?utm_source=ig_web_copy_link