மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் ஏதும் தெரியவில்லை. அதனால் சிபிஎஸ் யில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வு எப்போது வெளியானாலும் அதற்கு பின்னர் ஐந்து நாட்களுக்கு கல்லூரியில் சேர அந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு கலைக் கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி போன்றவைகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் பொருத்தே அமையும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் இதுவரை அரசு கலைக்கல்லூரிகளுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பத்துள்ளார்கள். தமிழக அரசு தரப்பிலும் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு சிபிஎஸ்சியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கால நீடிப்பு என்பது அரசு நிதி உதவி மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடதாக்கது. அரசு கல்லூரிகள் சேர மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பித்திருப்பதால் ஏற்கனவே இருந்த இடங்களை விட 25 சதவீதம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது .
முன்னதாக 15 சதவீதமாக இருந்தது கொரோனா கால கட்டத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டு எண்ணிக்கை 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டும் இது தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில் தான் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
மேலும் அமைச்சர் பொன்முடி ஆளுநர் தேதி கொடுக்காத காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தள்ளிப் போகிறது. அவர் தேதி கொடுத்தவுடன் விரைவில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர்ரிடம் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் தேர்வு எழுதி இருந்த நிலையில் திடீரென்று நேரடி வகுப்பிற்கு மாறிய காரணத்தால் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் அவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். மூவலூர் ராமாமிர்தம் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரி தொடங்கி ஒரு மாதத்தில் அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும். மாணவர்கள் அரசியல் அறிவு பெறுவதும் அவசியம் என்ற நிலை உள்ளது ஏற்கனவே முதல்வருடன் கலந்து பேசி மாணவர்கள் சங்கத் தேர்தல் நடந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.