குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! இந்த நாளில் டாஸ்மாக் கடை இயங்காது!
அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் மதுவிலக்கு கோரி மக்கள் கேட்டு வருகின்றனர். மதுவிலக்கு அமல்படுத்த முடியாத சூழலில் அவற்றின் நேரத்தை அரசாங்கம் மாற்றி அமைத்தது.அப்படி மாற்றப்பட்டு 12 மணிக்கு தான் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தொடங்கும். மேலும் அரசு விடுமுறை நாட்கள் ஆன காந்தி ஜெயந்தி ,மகாவீர்ஜெயந்தி ,சுதந்திர தினம் ,குடியரசு தினம் போன்ற தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது.
அவ்வாறு விடுப்பு அளிக்கப்பட்ட நாட்களில் சில இடங்களில் பிளாக்கில் சரக்கை விற்று வருகின்றனர். அவ்வாறு விற்று வருபவர்களை போலீசார் கண்டுபிடித்து தக்க தண்டனையும் வழங்கியும் வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சியில் வரும் 12ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதனால் அம்மாவட்டத்தில் ஜூலை 12ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இந்த உத்தரவை மீறி அந்த ஊராட்சியில் யாரேனும் பிளாக்கில் சரக்கு விற்று வந்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.தடையை மீறி பிளாக்கில் விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.