நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 2019 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கச்சா எண்ணெய் இறக்குமதி 7393 கோடி டாலராக குறைந்துள்ளது
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் நாடு சவுதி அரேபியா ஈரான் ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 7393 கோடி டாலராக உள்ளது கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 8 ஆயிரத்து 417 கோடி டாலராக இருந்தது ஆக இறக்குமதி 12 சதவீதம் குறைந்துள்ளது இதே காலத்தில் எண்ணெய் இல்லாத சரக்குகளை இறக்குமதி 6.9 சதவீதம் குறைந்துள்ளது.
நம் நாட்டில் ஓஎன்ஜிசி ஆயில் இந்தியா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.