போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

0
168
The new order of the transport department! Attention bus driver and conductor!
The new order of the transport department! Attention bus driver and conductor!

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

தற்பொழுது தொற்று பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பொழுது பின்பற்றிய கட்டுப்பாடுகள் தற்பொழுது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனாலயே தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கலாம். இந்த காரணத்தினால் தான் தமிழக அரசு அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் போட்டது. அப்படி அணிய மறுப்பவர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் பெருமாறும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தான் காணப்படுகிறது. அந்த மாவட்டத்தில் இயங்கும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. அவ்வாறு அணியாமல் இருப்பதால் வரும் பயணிகளுக்கும் இவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனை எல்லாம் கவனித்த போக்குவரத்து துறை புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பணியின் போது இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அதேபோல பேருந்தில் ஏறும் பயணிகளையும் முக கவசத்தை அணியும் படி வலியுறுத்த வேண்டும்.அதேபோல பணியில் இருக்கும் நடத்துனர்கள் அவ போது கைகளை கழுவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி நடத்துனர்கள் பயணச்சீட்டு வழங்கும்போது எச்சில் தொட்டு வழங்குவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முறையாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை அந்தந்த கிளை மேலாளர்கள் மண்டல மேலாளர்கள் கண்காணிக்குமாறு கூறியுள்ளனர்.

Previous articleமன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன?
Next articleஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!