சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்!
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டால் போதும் சபரிமலை ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஆனால் உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா பரவல் காரணத்தால் அனைத்தும் முடங்கிக் கிடந்தது. அதனால் அன்றாட தொழில் ஸ்தாபனங்கள் முதல் வழிபாட்டு தலங்கள் வரை அனைத்து மூடப்பட்டு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிறிது சிறிதாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு பெருமளவு இயல்பு நிலை திரும்பி வருகின்றது. இதனால் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆடி மாதம் சபரிமலையில் சிறப்பு பூஜை நடைபெறுவதை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்க பட உள்ளனர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அதனால் சபரிமலையில் இன்று முதல் 10 இடங்களில் தரிசனத்துக்கு நேரடியாக முன் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. இதன் படி 10 மையங்கள் அமைக்கப்பட்டு நேரடியாக முன்பதிவு செய்யலாம் என கேரளா தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு இந்த வசதிகள் பயன்படுத்தும் வகையில் எருமேலி, நிலைக்கல், குமிளி மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயம், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் ஆலயம், வைக்கம் மகாதேவர் ஆலயம், கொட்டா ரக்கர ஸ்ரீ மஹா கணபதி கோவில், பந்தளம் வலிய கோயிக்கல் ஆலயம், பெரும்பாவூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், கீழில்லம் மகாதேவர் கோவில் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக தரிசனத்துக்கு பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு ஆதார் கார்டு, அரசு அடையாள அட்டைகள் ஏதேனும் ஒன்று அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று கையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.