கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்!

0
211

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம்  7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். பல ஆண்டுகள் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11 ஆம் தேதி நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் கலந்துகொண்டார். அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விக்ரம் நேற்று நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விக்ரம் உடன் அவர் மகன் துருவ்வும் கலந்துகொண்டார்.

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்!

Previous articleசபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்!
Next articleகுப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here