எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து கொண்டு சட்டசபையில் திமுகவை சார்ந்த துரைமுருகன் கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தின் மீது பாராட்டு உரையாற்றினார் பன்னீர்செல்வம். அதோடு மட்டுமல்லாமல் பல சமயங்களில் அந்த கட்சிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அவருடைய மகனான ரவீந்திரநாத் குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அதன் பிறகு ஸ்டாலினின் பெருமை பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார்.
இவை அனைத்தும் அதிமுகவின் முக்கிய தலைவர்களை கொந்தளிக்க செய்தது. திமுகவை தீய சக்தி என்று தெரிவித்து விட்டு தான் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.
அப்படி தீய சக்தியாக எம் ஜி ஆரால் அடையாளம் கட்டப்பட்ட திமுகவுடன் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து கொண்டு நட்பு பாராட்டுவது எந்த விதத்தில் நியாயம்? என்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வெகுண்டெழ தொடங்கினார்கள்.
இந்த நிலையில், தான் நேற்று அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அத்துமீறி அதிமுகவின் அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம் கடப்பாறை கொண்டு அலுவலகத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த பல ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
ஆகவே பன்னீர்செல்வம் கருணாநிதியையும், திமுகவையும் புகழ்ந்து பேசியதால் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக நேற்று அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்ற போது தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் அவருடைய ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கம் மற்றும் அவருடைய மகனான மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தான் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளையிடான முரசொலி அதிமுகவை கேள்வி எழுப்பியிருக்கிறது. அதாவது பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அவருடைய ஆட்சியை பாராட்டி பேசியது தவறு என தெரிவித்தீர்களே. அப்படி இருக்கும்போது ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என முரசொலி கேள்வி எழுப்பி இருக்கிறது.
மேலும் திமுக ஒரு தீய சக்தி அதனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார் என்று தெரிவித்து வருகிறீர்களே, அந்த திமுகவை பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்து அவருடைய செயல்பாடுகளின் சிறப்பை பற்றி உரையாற்றுகிறார்.
இவை அனைத்தும் கட்சி விரோத நடவடிக்கைகள் என்று தெரிவித்து அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவருக்கு துணையாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சார்பாக கூட்டப்பட்டிருந்த பொதுக்குழு அறிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
பன்னீர்செல்வம் திமுகவையும், கருணாநிதியையும் புகழ்ந்து உரையாற்றியதால் அவரையும், சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவருடைய ஆதரவாளர்களையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை? என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
ரவீந்திரநாத் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அவருடைய ஆட்சியை பாராட்டி பேசியது தவறு என்று தெரிவிக்கிறீர்களே, அறிக்கைகள் அது தொடர்பாக வெளியிட்டீர்களே, பன்னீர்செல்வத்தின் மீதிருக்கும் குற்றச்சாட்டுகளில் அவருடைய மகன் முதலமைச்சரை பாராட்டி பேசியதும் ஒன்றுதானே என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அவ்வாறு இருக்கும்போது ரவீந்திரநாத் மீது எதற்காக இன்னமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை ? எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பதில் வழங்குமா? என்று அந்த நாளிதழின் மூலமாக ஆளும் கட்சியான திமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறது.