சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது? வெளியான சமீபத்தைய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது? வெளியான சமீபத்தைய தகவல்

ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர்  நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் மேல் எழுந்தன. சமூகவலைதளங்களில் பல ட்ரோல்களும் உருவாகின. இதையடுத்து இப்போது இந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் நெல்சன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐதராபாத்தில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment