கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!?

0
135
The woes of cooking a spilled mushroom!?
The woes of cooking a spilled mushroom!?

கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!?

சேலம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் அருகே   மலைபிரியாம்பாளையம் பகுதியில் தனியார் குளிர்சாதன கிடங்கு ஒன்றுள்ளது. இந்தக் கிடங்கில் மிளகாய்,புளி,மாங்காய்,ஆப்பிள்,திராட்சை, காளான்,மாதுளை பழம்,தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் என உணவுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு கெட்டுப் போன பொட்டணங்களை அப்படியே தூக்கி வீசி வருவதால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் அடித்து வருகின்றது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த துர்நாற்றம் காற்று வேகமாக அடிப்பதால் நாற்றம் குடலை புடுங்கும் அளவிற்கு அடிக்கின்றது.

இந்நாற்றத்தால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் சில ஊர் மக்கள் கீழே போடப்பட்ட காளான் பாக்கெட்டுகளை எடுத்து சமைத்தும் வருகின்றனர். இதனால் பல்வேறு வியாதிகள் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இதனை உணவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உணவுத்துறை அதிகாரியிடம் விரைவில் அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous articleஅதிமுக தலைமை அலுவலக வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு?
Next articleஇடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்!