செஸ் விளையாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த இனியன் சாதனை!!

Photo of author

By Parthipan K

செஸ் விளையாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த இனியன் சாதனை!!

பிரான்சில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் ஈரோட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்தவர் இனியன் இவர் செஸ் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளார்.

நல்ல புத்தி கூர்மையும் அறிவுத்திறனையும் பெற்றுள்ள இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து வருகின்றார். இளையோர் கிராண்ட் மாஸ்டராக புகழ்பெற்ற இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள லா பிளாங்கே நகரில் கடந்த இரண்டாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடந்த லா பிளாங்கே ஓபன் செஸ் போட்டிகளில் இந்த ஆண்டுக்கான விளையாட்டில் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இப் போட்டிகளில் பல நாடுகளில் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டனர். நைன் கிராண்ட் மாஸ்டர்கள் 18 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 95 செஸ் வீரர்கள் இதில் கலந்து கொண்டார்கள். இதில் சுமார் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. இதில் இந்திய வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் என்பவர் ஐந்து சுற்றுகளில் வெற்றி பெற்றார் .

மேலும் நான்கு சுற்றுகளில் சமநிலையும் பெற்றார். மேலும் இவர் ஏழு புள்ளி கணக்கையும் வென்றுள்ளார்.இப்புள்ளிகள் இதுபோன்ற போட்டிகளில் அதிகபட்ச புள்ளியாக கருதப்படுகிறது. இனியன் உட்பட இரண்டு பேர் ஏழு புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்ததால் டை பிரேக் முறையில் முடிவு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த முடிவில் கிராண்ட் மாஸ்டர் இனிய இரண்டாவது இடம் பெற்று வெற்றி பெற்றார். இனியனுக்கு  அங்கிருந்த சக வீரர்கள் மற்றும் பெரிய அதிகாரிகள் தங்களது  வாழ்த்துக்களை  தெரிவித்தார்கள். நம் நாட்டிற்கே பெருமை சேர்த்த இவர் பல தலைவர்களால் பாராட்ட பட்டு வருகின்றார்.