காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!
பெரும்பாலான செல்போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. சந்தையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றுள் சில செல்போன்களில் இந்த வருடத்துடன் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ பயன்படுத்தி இயங்கும் செல்போன்கள் முற்றிலுமாக வாட்ஸ் அப் சேவையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 31 2019 இந்த சேவை முடிவடைகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ios 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய செல்போன்களிலும் வாட்ஸ்அப் அடுத்த ஜனவரியில் செயல்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நீங்கள் விண்டோஸ் மொபைல் பயன்படுத்துபவர் என்றால் இந்த மாதத்திற்குள்ளாக உங்களது வாட்ஸப்பில் உங்களது வாட்ஸ் அப் மெனுவில் எக்ஸ்போர்ட் எனும் வசதியை பயன்படுத்தி உங்களுடைய அனைத்து தகவல்கள் மற்றும் மீடியாக்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த முடிவால் பெருமளவு பாதிப்பு இருக்காது என்றே கூறுகின்றனர்.
முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. வாட்ஸ்அப் பேஸ்புக் கைவசம் சென்றதிலிருந்து, வாட்ஸப்பில் பல்வேறு முன்னேற்றங்கள், அப்டேட்கள், மற்றும் செய்திகளை எளிமையாக பகிர்வதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.