சேலம் மாவட்டத்தில் தீயினால் கருகி கன்று குட்டி உயிரிழப்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்?!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அடுத்த கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். அவருடைய வயது 60. இவர் தன் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.இவருக்கு சொந்தமான கூரை வீடு மற்றும் ஆடு தங்குவதற்காக ஆட்டு கொட்டாய் ஒன்றை கட்டியுள்ளார்.
இதில் நேற்று இரவு முத்துவேல் அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு மகன்களான கௌதம், சின்றாஜ் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென்று தீ வீடு மற்றும் ஆட்டுக்கொட்டாய் முழுவதும் பற்றி எறிந்தது.
மல மலவென தீ பற்றியதை தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் வெளியே வந்த பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இதைத்தொடர்ந்து அனைவரும் தீயை அணைக்க தண்ணீரை மொண்டு ஊற்றினர்.
தண்ணீருக்கு அசையாத தீ மேலும் கொழுந்து விட்டு எறிந்தது. செய்வதென்று தெரியாமல் அவரது மகன்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மேலும் கூரை வீட்டிலிருந்த பீரோ,கட்டில், மெத்தை, நகைகள், வாஷிங் மெஷின், கிரைண்டர், பிரிட்ஜ், ஸ்கூட்டி, வீட்டு பத்திரம், நெல் பத்து மூட்டை,பணம் பத்தாயிரம், பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் மற்றும் பசுயிட்ட கன்று குட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் இது குறித்து ஆத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது .