முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை எப்படி உள்ளது?… மருத்துவமனை வெளியிட்ட சமீபத்தைய தகவல்!

0
266

முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை எப்படி உள்ளது?… மருத்துவமனை வெளியிட்ட சமீபத்தைய தகவல்!

முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

மேலும் இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை தெரிவித்தார்கள். தொற்று காரணமாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றார். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று தனது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள சென்ற நிலையில் அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் காவேரி மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “ முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா சிகிச்சை படியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் உடல்நலனில் முன்னேற்றம் உள்ளது. அவர் இன்னும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பார் என்று தெரிய வருகிறது.

Previous articleஎங்கிருந்து வந்து ஈரோடு மாவட்டத்துல கஞ்சா சாக்லேட் விற்பனை செய்கிற? வசமாக சிக்கிய இரு வாலிபர் கைது !..
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here