விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் SJ சூர்யா… வெளியான வேற லெவல் அப்டேட்!

விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் SJ சூர்யா… வெளியான வேற லெவல் அப்டேட்!

விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக சிறு இடைவெளிகளோடு படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. முதலில் சென்னையில் தொடங்கிய ஷூட்டிங் பின்னர் ஐதராபாத்தில் நடந்தது. பின்னர் ஜுன் மாத இறுதியில் சென்னையில் நடந்தது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்ப அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக  வாரிசு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டேக்லைன் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது லார்கோ வின்ச் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கலாம் என்று சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். ஆனால் இப்போது அந்த படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிதான் இந்த படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஏற்கனவே நடித்துவரும் நிலையில் இப்போது எஸ் ஜே சூர்யா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்யும் எஸ் ஜே சூர்யாவும் நண்பன் மற்றும் மெர்சல் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதுபோல விஜய்யை வைத்து எஸ் ஜே சூர்யா குஷி என்ற படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment