இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

0
316

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

 

ஆடி மாதம் வந்து விட்டாலே முதல் வேலை  தேங்காய் சுடுவதுதான்.ஆனால் அதை விட முக்கியமானது ஒன்றுள்ளது.நம்மை எல்லாம் காத்தருளுபவர் அம்மன்.அம்மனுக்கு மிக மிக உகந்த நாள் இன்று.இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை ஆடி மாதம் முதல் நாள் அன்று வழிபாடு செய்வது அம்மாதம் முழுவதும் நன்மையை அளிக்கும். சில ஊர்களில் அம்மன் காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருக்கும். சில இடங்களில் தெருக்களில் அம்மன் கோவில் இருக்கும். மேலும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய அம்பாளை கட்டாயமாக தரிசனம் செய்து விடுங்கள்.

உங்கள் சொந்த ஊரில் இருக்கக்கூடிய அம்பாளை மற்றும் குலதெய்வத்தை சென்று தரிசனம் செய்யலாம் தவறு கிடையாது. உங்களுடைய குலதெய்வம் அம்பாள் இல்லாமல் வேறு ஏதாவது தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வங்களை ஆடி மாதம் அன்று தரிசனம் செய்யலாம். மறக்காதீங்க நாளை உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்கு கட்டாயம் போய் அம்பாளை மனமார தரிசனம் செய்யுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய கோவிலில் திருவிழா, கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி என்றால் கட்டாயமாக அதில் நீங்கள் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

Previous articleவிருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர்
Next articleகள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here