மருத்துவர்கள் சொன்னாலும் மனம் ஒப்பவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

0
135

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தமிழக முழுவதும் பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். நோய் தொற்று பாதிப்பு ஒருபுறம் இருந்து வந்தாலும் தன்னுடைய வேலையை அவர் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் செய்து வந்தார்.

இதனால் பொதுமக்களிடையே அவருக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது, அதோடு பல மாவட்டங்களில் அவர் நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக அவர் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதோடு நோய் தொற்று பரவல் வேகமாக பரவி வருவதன் காரணமாக, சமூக இடைவேளை முக்கியம் என்ற உத்தரவை பிறப்பித்தது மாநில அரசு தான். ஆனால் ஒரு முதல்வரே இப்படி சமூக இடைவேளையை பின்பற்றாமல் செயல்படலாமா? என்ற குற்றச்சாட்டும் அவர் மீது எழத் தொடங்கியது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அதன் பிறகு மருத்துவரின் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆகவே அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு நல்ல நல்ல உடல் நலம் பெற்று வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்டார்ஜ் செய்யப்படுகிறார், காவேரி மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காலை 9:45 மணியளவில் அவர டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த 12ஆம் தேதி நோய் தொற்று பாதிப்பு இருப்பது அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், 14 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற காவேரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது எழுதியிருக்கின்ற கடிதத்தில் தாம் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் ஒரு வார காலம் வீட்டிலிருந்து பணிகளை கவனிக்கவிருப்பதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மருத்துவரின் அறிவுறுத்தல் காரணமாக, வீட்டிலே வாழ்வில் இருந்தாலும் மனம் ஓப்பதில்லை முதலமைச்சர் என்ற முறையில் நான் செய்ய வேண்டிய பணிகளை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடியே இருப்பேன். ஜூலை மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் விதத்தில் வீட்டில் இருந்தபடியே காணொளியில் உரையாற்றிட விழைகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.