மாணவ மாணவிகளின் தொடர் தற்கொலை விவகாரம்! இதை தடுப்பதற்கு வழி தான் என்ன?

0
129

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் செயல்படாத சம்பிரதாயமாகவே இருந்து வருகின்றன.

இந்த நிலையில் அவ்வபோது பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாலியல் தொந்தரவு காரணமாகவும் மற்றும் ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் உள்ளிட்டவை காரணமாகவும், தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள்.

அப்படி விபரீத முடிவுகளை மேற்கொள்ளும் மாணவ மாணவிகளின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் அவர்களிடம் பெற்றோர்கள் சரியாக நடந்து கொள்ளாதது தான் காரணம் என்று தோன்றுகிறது.

அவர்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்வதில்லை பள்ளியில் ஒரு மாணவனுக்கு அல்லது மாணவிக்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று அதன் மூலமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேர்ந்தால் அவர்களுடைய நடவடிக்கை முற்றிலுமாக வித்தியாசமாக இருக்கும்.

அப்படி இருக்கும் போது அதனை வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் கவனித்து அவர்களிடம் நின்று நிதானமாக பேச்சு கொடுத்தால் அவர்களிடம் நிச்சயமாக தங்களுடைய மனதில் இருக்கின்ற எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.

ஆனாலும் கூட பெற்றோர்கள் இதனை செய்வதில்லை. பள்ளியில் தான் எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று தெரிவிக்கிறார்கள் என்றால் வீட்டிற்கு வந்தால் மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறியாமல் வீட்டிலேயே வீட்டுப் பாடங்களை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல காரணங்களை தெரிவித்து அந்த மாணவ, மாணவிகளை கண்டிப்பதிலேயே கூறியாக இருக்கிறார்கள்.

இதனால் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கு வித்தியாசமே தெரியாமல் போய்விட்டது.

அதன் விளைவு தான் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு என்று தான் எண்ண தோன்றுகிறது.

ஆனால் கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக இன்னும் முழுமையான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவர் எழுதி வைத்ததாக சொல்லப்பட்ட கடிதம் மட்டுமே வெளியாகியிருக்கிறது.

அதனடிப்படையில் தான் பள்ளியின் முதல்வர் தாளாளர் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நேற்று தான் அந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

ஆகவே இன்னும் பல்வேறு உண்மைகள் விரைவில் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு சமூக வலைதளங்களில் அந்த பள்ளியில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே வருவதைப் போன்று ஒரு வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் அந்த பள்ளி முதல்வரின் மகன் என்று சொல்லப்படுகிறது அதோடு அவரால் துன்புறுத்தப்பட்டு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு பள்ளியின் தாளாளர் அறையில் பல ஆணுறைகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது மேலும் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சமயத்தில் அறையில் ஆணுறை ரத்தத்துடன் கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே இவை அனைத்தையும் பிவிசிஐடி காவல்துறையினர் விரிவாக விசாரணை செய்து உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் இந்த சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ எந்த ஒரு தொலைக்காட்சியிலும் இதுவரையில் வெளியாகவில்லை, ஆகவே இது வெறும் வதந்தி என்று தான் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அது தொடர்பான முழுமையான விசாரணையை நடத்திவிட்டு பின்னர் அது வதந்தியா அல்லது உண்மையா என்பதை காவல்துறை மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.