பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

Photo of author

By Vinoth

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

உலகப்பணக்காரர்கள் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் 12 முறை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இப்போது அவர் உலகப்பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது அந்த அறக்கட்டளைக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் தனது சொத்துகள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுப்பதை விட இந்த அறக்கட்டளைக்கே செலவிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நன்கொடையால் அவரின் சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

இதனால் இப்போது அவர் பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு சென்றுள்ளார். இதன் மூலம் 112 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பில் இருக்கும் கௌதம் அதானி நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் அதானி, சமீபத்தில் 60 வயதைப் பூர்த்தி செய்தார். அதையொட்டி 60000 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.