78 செய்தி சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு 

Photo of author

By Anand

78 செய்தி சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

யூ-டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் உள்ளிட்ட 560 யூ-டியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

India has blocked 78 YouTube news channels, 560 URLs since 2021: I&B minister

இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “யூ-டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் மற்றும் 560 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மை மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்குகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.