தொலைத் தொடர்பு துறையில் ஜியோ படைத்த புதிய சாதனை!

0
185

ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ஜியோ நிறுவனம் கடந்த மே மாதத்தில் 31 லட்சம் வாடிக்கையாளர்களை தன வசமாக்கி இருக்கிறது. இதன் மூலமாக ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40.87 கோடியாக அதிகரித்திருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகின்ற ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டில் முதன்முறையாக குறைந்த விலையில் அன்லிமிடெட் இணைய சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அதிகளவிலான வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கவர்ந்திருக்கிறது. தற்போது தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருப்பது ஜியோ தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைத்து புள்ளி விவரங்களை ட்ராய் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், கடந்த மே மாதத்தில் ஜியோ நிறுவனம் கூடுதலாக 31 லட்சம் வாடிக்கையாளர்களை தன்வசமாக்கி முதலிடத்திலிருக்கிறது. இதன் மூலமாக ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40.87 கோடியாக அதிகரித்திருக்கிறது.

சுனில் மெட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 10.27 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்ததை தொடர்ந்து அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 36.21 கோடியாக அதிகரித்திருக்கிறது.

அதே சமயம் வோடபோன் ஐடியா நிறுவனம் 7.59 லட்சம் வாடிக்கையாளர்களை இந்த காலகட்டத்தில் இழந்திருக்கிறது. இதன் மூலமாக அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25.84 கோடியாக சரிந்தது.

Previous articleஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்க விருப்பமா? உடனே விண்ணப்பங்கள்!
Next article90-ஸில் கலக்கிய யமஹா RX 100 மீண்டும் வருகிறது… பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி