90-ஸில் கலக்கிய யமஹா RX 100 மீண்டும் வருகிறது… பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

0
130

யமஹா நிறுவனத்தின் RX 100 இருசக்கர வாகனம் மீண்டும் சந்தைக்கு வர உள்ளது.

யமஹா நிறுவனத்தின் புகழ்பெற்ற இரு சக்கரவாகனங்களில் ஒன்று RX 100. 2 ஸ்ட்ரோக் இன்ஜின் வண்டியான இது இந்தியாவில் 90 களில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் அந்த வண்டியின் சத்தம்.

ஆனால் சுற்று சூழல் காரணமாக 90 களில் இந்த வண்டி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் பலரும் இந்த வண்டியை மாடிஃபை செய்து இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போதும் மார்க்கெட்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த வண்டி விற்பனையில் உள்ளது.

இந்நிலையில் இந்த பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக புகழ்பெற்ற யமஹா RX100 அதன் மீண்டும் சந்தைக்கு வர உள்ளது.  யமஹா இந்தியாவின் தலைவர் ஈஷின் சிஹானா, இதை உறுதி செய்துள்ளார்.

ஒரு நிகழ்வில் பேசிய சிஹானா, RX100 பிராண்டை மீண்டும் கொண்டு வரும் நிறுவனத்தின் நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், BS6-இணக்கமான எஞ்சினை உருவாக்குவதில் உள்ள சிரமத்தையும் அவர் சுட்டிக்காட்டினார், மேலும் அசல் பைக்கை நவீன மாற்றங்கள் மற்றும் விருப்பங்களுடன் மறுபிறவி செய்வது சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் இந்த மாடல் பைக் யமஹாவில் ஏற்கனவே 2025 வரை மற்ற இரு சக்கர வாகனங்கள் பைப்லைனில் இருப்பதால், 2026க்குப் பிறகுதான் பைக்கை அறிமுகப்படுத்த முடியும் என்று சிஹானா கூறினார். இதில் Yamaha MT-07 மற்றும் Yamaha R7 ஆகியவை அடங்கும்.

Previous articleதொலைத் தொடர்பு துறையில் ஜியோ படைத்த புதிய சாதனை!
Next articleதேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!