வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்? வெளியான அறிவிப்பு 

0
144
Free electricity in Gujrat
Free electricity in Gujrat

வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்? வெளியான அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய பிரதமர் மோடி முதல்வராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அங்கு தொடர்ந்து 20 ஆண்டுகளாக பாஜக கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை தக்கவைக்க ஆளும் கட்சியான பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் ஆம்.ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகின்றன.

குறிப்பாக டெல்லியை தொடர்ந்து தற்போது பஞ்சாபை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியானது தற்போது குஜராத் மீது கவனம் செலுத்தி வருகிறது. அந்த மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில், தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது குஜராத் மாநிலம் சூரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், விரைவில் நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியை அறிவித்தார்.

அதாவது அவர் அளித்த வாக்குறுதிப்படி குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், குறிப்பாக 24 மணிநேரமும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் உறுதியாக கூறினார்.

மேலும் டிசம்பர் 31, 2021 வரை நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும்என்றும் அந்த வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்த நகைச்சுவை நடிகரை பிடிக்காத ஆட்களே இல்லை?இவரை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்திடும் !!வாங்க அவரையும் அவரது புது வீட்டையும் பார்க்கலாம்!?..
Next articleவாரிசு படத்தின் புதிய அப்டேட்! தளபதி விஜயின் பெயர் இதுதானா!