கண்டுகொள்ளாத அரசாங்கத்திற்கு மக்கள் கொடுத்த சவுக்கு அடி! இனி என்ன செய்யப்போகிறது?
பல மாநிலங்களில் மக்கள் கோரிக்கையாக தற்போது வரை சாலை வசதி, நிழற்கூடம் அமைத்து தருதல்,குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகாளகதான் உள்ளது.மக்கள் பலமுறை இதுகுறித்து மனு கொடுத்து கோரிக்கை வைக்கின்றனர்.ஒவ்வொரு முறையும் மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அப்போதைக்கு வாங்கிவிட்டு காற்று வாக்கில் பறக்க விட்டுவிடுகின்றனர்.
பொறுத்திருந்து பார்க்கும் மக்கள் தாங்களாகவே முன்வந்து சுய செலவில் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.அரசாங்கத்திற்கு வரியையும் செலுத்துகின்றனர்.இவ்வாறு கர்நாடக மாநிலத்தில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் நிலையில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடாக மாநிலம் கதக் என்னும் மாவட்டத்தில் பல மாதங்களாக மக்கள் பேருந்து நிலையம் அமைத்து தருமாறு கேட்டுள்ளனர்.பேருந்து நிலையம் இல்லாததால்,பயணிகள் வெயில், மழை என பாராமல் சிரமப்பட்டு காத்திருக்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி பல பேருந்துகள் அந்த இடத்தில் நிற்கமால் சென்றும் விடுகிறது.இந்த குறைகளை அவ்வூர் திருத்தம் செய்து தரும்படி கேட்டு வந்துள்ளனர்.ஆனால் அரசோ சிறிதும் கண்டுகொள்ளாமல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் தற்பொழுது அவ்வூர் மக்கள் ஓர் செயலை செய்துள்ளனர்.அவ்வூர் மக்களே தானாக முன்வந்து தெண்ணங்கீற்றில் பேருந்து நிலையத்தை அமைத்துள்ளனர்.புதிய பேருந்து நிலையம் அமைத்தால் அரசியல் தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகள் யாரேனும் வந்து திறந்து வைப்பது வழக்கம்.ஆனால் இது அரசாங்கம் கண்டுகொள்ளாததால்,அவர்களை அவமானம் படுத்தும் நோக்கில் எருமைமாட்டை கொண்டு திறப்பு விழா நடத்தியுள்ளனர்.இது அரசாங்கத்திற்கு சவுக்கு அடி கொடுத்ததற்கு சமம்.