விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு

0
189

விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு

எலான் மஸ்க்கின் தந்தை தன்னுடைய விந்தணுக்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது.

டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், தனது விந்தணுக்களை தானம் செய்ய ஒரு தென் அமெரிக்க நிறுவனத்தால் அனுகப்பட்டுள்ளார். 76 வயதான எரோல், தனது வளர்ப்பு மகள் ஜனா பெசுய்டன்ஹவுட்டுடன் தனக்கு இரண்டாவது குழந்தை இருப்பதை சமீபத்தில் அறிவித்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.

கொலம்பியாவில் உள்ள ஒரு நிறுவனம் தனது புதிய தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் தனது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டுவதாகக் கூறியுள்ளார். மேலும் தான் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Previous articleவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க உத்தரவு
Next articleசந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை!