பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!

0
147

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!

 

மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதில் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. அரும்பாடு பட்டு உழைத்தாலும் இந்த பணம் நம் அருகில் வரவே மாட்டேன் என்கிறதே மக்களின் வேதனை. அன்றாடம் நமக்கு தேவையான பணத்தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை நமக்கு அளித்த வரம்தான் கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு.கோமதி சக்கரம் பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை உடையது. வலம்புரி சங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது.இவற்றை எவ்வாறு வழிபடுவது சொல்கிறேன் கேளுங்கள்!!

 

கோமதி சக்கரத்தை காய்ச்சாத பசும்பாலில் அபிஷேகம் செய்த பின்பு தூய்மையான நீரில் கழுவி நன்றாக துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு செம்பு தட்டில் சிவப்பு வண்ண துணியின் மீது கோமதி சக்கரத்தை பிரதிஷ்டை செய்து பூ வைத்து மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.வலம்புரி சங்கு வழிபடும் முறையை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்!!

 

வலம்புரி சங்கை சுத்தமான நீரில் கழுவி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றியபின் மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.

மகாலட்சுமி கோமதி சக்கரம் இருக்கும் இடத்தில் தோஷங்கள் துஷ்ட சக்திகள் அண்டாது.கண் திருஷ்டி பகைவர்களின் நீசச் செயல் அனைத்துமே பலனிழந்து போகும்.கடன் பிரச்சனை நீங்கும்.வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.கணவன் மற்றும் மனைவி சச்சரவுகள் போக்கும்.வியாபாரத்தில் நஷ்டம் மற்றும்வியாபார சிக்கல்கள் குறைக்கும்.இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளுமே படிப்படியாக குறையும்.முழு மனதுடன் வேண்டி சொன்னதை பண்ணுங்கள் உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும் செல்வம் செழிக்கும்.