அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
சேலம் மாவட்டம்…சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் இக்கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூமாலை சாற்றலுடன் தொடங்கி இவ்விழா 22 நாட்கள் நடைபெறும். இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூக்கள் எடுத்துச் செல்லப்படும்.
இதைத்தொடர்ந்து அந்தந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பண்டிகையின் போது கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரிநாதசுவாமி திருக்கோயிலிருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது. இது அக்காலத்தில் தொன்றுதொட்டு நடந்து வரும் அற்புத நிகழ்ச்சியாகும். இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை மாறாக ஊட்டிவிடப்படுகிறது. இந்த மிகப்பெரிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவத்திற்கு வரும் 10ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதனை மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார். இதனால் குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்லும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆய்ந்துள்ளனர்.