இன்று குரூப் 4 நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு!..

0
122

இன்று குரூப் 4 நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு!..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. மேலும் இதற்காக டி.என்.பி.எஸ்.சி விரிவான  பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர்களும் மற்றும் பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர்களும் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதவுள்ளார்கள்.

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7 ஆயிரத்து 689 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் 503 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகிது. சென்னையில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வில் மொத்தம் 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக 2௦௦௦க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இவை குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிப்பதாக, மத்திய,மாநில அரசு தேர்வுகள் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறோம்.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வை அதிகளவில் எழுதுகின்றனர்.போதிய அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்க அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இதைதொடர்ந்து தமிழகம் முழுதும் வழக்கமாக செல்லும் பேருந்துகளை விட கூடுதலாக 2௦௦௦க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். மேலும் இந்த சிறப்பு பேருந்துகளில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு என லேபிள் ஒட்டப்படும் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்கள்.