உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை! உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
இரண்டு ஆண்டுகளாக கொரானா பரவல் அதிகம் காணப்பட்டது மேலும் குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை வைரஸ்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அந்த வகையில் குரங்கம்மை நோய் முதன் முதலில் அமெரிக்காவில் பரவியது. உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் பல்வேறு மாகாணங்களுக்கும் குரங்கம்மை பரவியது கடந்த சில வாரங்களில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை நோய் 16,000 பேர்களுக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்நிலையில் குரங்கமை நோய் பரவல் உலகளவிய சுகாதார அவசரநிலை என உலக அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பாவுக்கு குரங்கமையால் அதிக பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது எனவும் பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வருவதை அடுத்து சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக குரங்கமை நோயை சுகாதார நெருக்கடி நிலையாக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.