பால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!..
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இங்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பல மயில் தூரத்தில் இருக்கும் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி கட்டல் 40 வயதான பெண்மணி சமீபத்தில் விபத்து ஒன்றில் காயமடைந்தார். இந்நிலையில் அருகில் மருத்துவமனை இல்லாததால் கிராமத்தினர் துணியால் ஸ்ட்ரெச்சரை உருவாக்கி அவரை பல கி.மீ. துாரம் சிகிச்சைக்காக துாக்கிச் சென்றனர்.
இதற்காக நீரோட்டம் மிகுந்த ஆறு ஒன்றையும் வழுக்கு பாறைகளையும் உயிரைப் பணயம் வைத்து கடந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் விரைவில் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்மென வலைத்தளங்களில் வீடியோவை பார்த்த மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.