போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!
சமீப காலமாக படிக்கும் மாணவர்களிடையே அதிக அளவு போதைப்பழக்கம் உண்டாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி தமிழகத்தையே உரு குலைக்க வைத்தது. இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ,உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் போதை பொருட்கள் எத்தனை சதவீதம் பேர் உபயோகம் செய்கிறார்கள் என்று ஆய்வு நடத்தப்பட்டது.அதில் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. அந்த ஆய்வில் ஒன்பது சதவீதம் பேர் மாணவர்கள் தான் போதை பொருள்களுக்கு அடிமையாக்கி உள்ளதாக கூறினார். நடப்பு ஆண்டில் பத்து சதவீதத்தையும் தாண்டி விட்டதாக கூறியுள்ளனர்.
போதைப் பொருள்கள் எளிதாக கிடைப்பதால் தான் மாணவர்கள் அதற்கு அடிமையாகும் சூழல் உண்டாகிவிட்டது. குறிப்பாக பள்ளி கல்லூரி சுற்றியுள்ள பகுதிகளில் தான் போதை பொருள்கள் அதிக அளவு விற்கப்படுகிறது. மேற்படிப்புக்காக விடுதியில் மற்றும் தனியாக அறை எடுத்து தங்கும் இளைஞர்கள் அதிவிரைவிலேயே போதை பொருள் உபயோகிக்க பழகிகொள்கின்றனர். எனவே இதனை தடுக்கவும், தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதை பொருளை ஒழிக்க வலியுறுத்தியும் வரும் 30ஆம் தேதி சனிக்கிழமை அன்று 11 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் முழக்கப் போராட்டம் நடத்த உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சியின் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி தலைமை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.